புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி நடைபெற்ற காட்சி
கயத்தாறில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி
- கயத்தாரில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி விழா.
- அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் தேர் பவனி தொடங்கியது.
கயத்தாறு:
கயத்தாரில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி விழா. இன்று அதிகாலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது.
திருவிழா கடந்த 10 தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை மாலை நற்கருணை, திருப்பலி, நல் ஆராதனை, சொற்பொழிவுகள், உட்பட தினமும் பல்வேறு சபை களில் இருந்து கிறிஸ்துவ பாதிரியார்கள் வந்து சொற்பொழிவு ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் தேர் பவனி தொடங்கியது. இந்த தேர்பவணி ஆஸ்பத்திரி சாலை, பழைய கடம்பூர் ரோடு, வாரச்சந்தை ரோடு, விமான சாலை வழியாக பல்வேறு ரத விதிகளில் தேர் பவனி வந்தது. வழியெங்கும் பக்தர்கள் உப்பு, மிளகு பெற்றுக் கொண்டு, மாலை அணிவித்து ஜெப வழிபாடு செய்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.