உள்ளூர் செய்திகள்

கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Published On 2022-06-21 14:18 IST   |   Update On 2022-06-21 14:18:00 IST
  • கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
  • தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் விழா சிறப்புரை ஆற்றினார்.

கடலூர்:

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜோதி வெங்கடேசுவரன் தலைமை தாங்கினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி விழா சிறப்புரை ஆற்றினார். விழாவில் பெரியார் கலைக் கல்லூரியில் பயின்ற மாணவ மாணவிகள் 2062 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில் பெரியார் கலைக் கல்லூரியில் அனைத்து துறைத் தலைவர்கள், நூலகர், உடற்கல்வி இயக்குநர், பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் பட்டம்பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பெரியார் கலைக் கல்லூரி பொருளியல் துறைத் தலைவர் ராமகிருஷ்ணன் சாந்தி நன்றி உரை ஆற்றினார்.

Tags:    

Similar News