உள்ளூர் செய்திகள்

வேதாரண்யத்தில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் மோகனசுந்தரம், மாணவர் சதீஷ்.

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியரும், மாணவரும்-பொதுமக்கள் பாராட்டு

Published On 2022-09-12 09:26 GMT   |   Update On 2022-09-12 09:26 GMT
  • அரசு தேர்வில் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி அடைய வைத்து சாதனை படைத்து வருகிறார்.
  • தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பன்னாள் உயர்நிலைப் பள்ளியில் மோகனசுந்தரம் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் 1992ம் ஆண்டு ஆசிரியராக பணியில் சேர்ந்து 8 பள்ளிகளில் கணித ஆசிரியராக பணியாற்றி சுமார் 7 ஆயிரம் மாணவர்களுக்கு கணிதத்தை எளிமையாக கற்றுக் கொடுத்து அரசு தேர்வில் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி அடைய வைத்து சாதனை படைத்து வருகிறார்.

கணித பாடத்தை எளிமை யாக கற்றுத் தந்து அனைத்து மாணவர்களையும் தேர்ச்சிடைய செய்த காரணத்தால் மோகன சுந்தரம் ஆசிரியருக்கு தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

நல்லாசிரியர் சான்றிதழ் உடன் அரசு வழங்கிய 10,000 காசோலையை பள்ளி நிதிக்காக அர் வழங்கியுள்ளார்.

இதேபோல் மோகனசுந்த ரத்திடம் படித்த பன்னாள் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற மாணவர் கோகூர் பள்ளியில் கணித ஆசிரியராக தற்போது பணியாற்றி வருகிறார்.

மாணவர்களின் பன்முகத்திறனை வெளிப்ப டுத்தும் வகையில் இவர் கல்வி கற்பித்து வருவதால் இவருக்கும் தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

ஒரே கிராமத்தில் ஆசிரியர் மோகனசுந்தரத்திற்கும், இவரது மாணவர் ஆசிரியர் சதீஷ் ஆகிய இருவருக்கும் ஒரே மேடையில்நல்லாசி ரியர் விருது வழங்கியதை அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

Tags:    

Similar News