உள்ளூர் செய்திகள்

வேலை வாங்கி தருவதாக பண மோசடி: தருமபுரி வேளாண்துறை அதிகாரி கைது

Published On 2022-10-17 15:11 IST   |   Update On 2022-10-17 15:11:00 IST
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ஆறுமுகம் கூறியுள்ளார்.
  • பண மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து ஆறுமுகம் கைது செய்யப்பட்டார்.

தருமபுரி,

தருமபுரி வேடியப்பன் திட்டு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 48).இவர் வேளாண்மை துறையில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் குளியனூர் பகுதியை சேர்ந்த சித்ரா என்பவரது மகன் அருண் என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ஆறுமுகம் கூறியுள்ளார்.

இதற்காக அருணிடம் இருந்து ரூ.9.5 லட்சம் பணம் வாங்கியுள்ளார்.ஆனால் சொன்னபடி அருணுக்கு ஆறுமுகம் வேலை வாங்கி தரவில்லை.பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

பணத்தை கேட்டபோது ஆறுமுகம் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சித்ராவும் அவரது மகன் அருணும் தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தனர்.அவர் இந்த புகாரை விசாரிக்கும்படி குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ராமச்சந்திரனுக்கு உத்தரவிட்டார்.

குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி ஆறுமுகம் பண மோசடி செய்தது உறுதியானது.

இதையடுத்து ஆறுமுகம் கைது செய்யப்பட்டார்.அருண் தவிர வேறு யாரிடமாவது இவ்வாறு ஆறுமுகம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News