உள்ளூர் செய்திகள்

(கோப்பு படம்)

தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு மூடு விழா நடத்தி விட்டது திமுக அரசு- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Update: 2022-10-04 13:49 GMT
  • ஓசி பயணம் என்று பேசிய அமைச்சரை, முதலமைச்சர் கண்டிக்காதது ஏன்?
  • அமைச்சரின் பேச்சால், இலவச பயணம் செய்ய பெண்கள் அவமானப்படுகிறார்கள்.

சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:- அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக அரசு மூடு விழா நடத்தியுள்ளது. தாலிக்கு தங்கம் போன்ற நல்ல திட்டங்களை திமுக அரசு மூடி விட்டது.

யானை பசிக்கு சோளப்பொறி போல, மாணவிகளுக்கு 1000 ரூபாய் உதவித் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு பேருந்தில் பெண்கள் ஓசியாக பயணிப்பதாக அமைச்சர் பொன்முடி கூறியதால் ஒவ்வொரு பெண்ணும் இலவசமாக பயணம் செய்ய அவமானப் படுகிறார்கள்.

ஓசி பயணம் என்று பேசிய அமைச்சரை, முதலமைச்சர் கண்டிக்காதது ஏன்? மேயரிடம் அமைச்சர் அதிகார தொனியில் பேசியது சரியானது அல்ல. அமைச்சர்கள் செய்யும் அடாவடிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தான் முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடுகள் உள்ளன.

ஒ.பி.எஸ்.க்கு தொண்டர்கள் ஆதரவு இல்லை. அறிக்கைகள், டிவிட்டரில் மட்டும் தான் அவர் செயல்படுகிறார். பருவமழை வரவுள்ளதால், மழை நீர்வடிகால் பணி குறித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் கூறியது வெட்ட வெளிச்சத்திற்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News