உள்ளூர் செய்திகள்

கடலூர் முதுநகரில் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-05-24 14:36 IST   |   Update On 2023-05-24 14:36:00 IST
  • கடலூர் முதுநகரில் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • சுந்தர் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

கடலூர்:

கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பத்தை சேர்ந்தவர் சுந்தர் (வயது 40). மீனவர். இவருக்கு திருமணமாகி 9 வருடமாகிறது. இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சுந்தர் மன உளைச்சலில் இருந்து வந்தவர் வீட்டில் தூக்கு மாட்டி இறந்த நிலையில் இருந்தார். தகவல் அறிந்த கடலூர் துறைமுகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுந்தர் உடலை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News