உள்ளூர் செய்திகள்
மாடியில் இருந்து விழுந்து பிளஸ்-2 மாணவி பலி
- மொட்டை மாடியில் மதுமித்ரா செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
- அப்போது எதிர்பாராத விதமாக மொட்டை மாடியில் இருந்து தவறி அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் உள்ள கட்டிக்கானபள்ளி, பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி வடிவழகி (வயது47). இவர் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு மது மித்ரா (17) மகள் உள்ளார். இவர் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் மொட்டை மாடியில் மதுமித்ரா செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மொட்டை மாடியில் இருந்து தவறி அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.