எக்ஸ்பிரஸ் ரெயில் பேராவூரணி, அதிராம்பட்டினத்தில் நின்று செல்ல அனுமதி
- அதிராம்பட்டினம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டன.
- ரெயில்வே வாரியத்திற்கு பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர்:
எர்ணாகுளம்- வேளாங்கண்ணி விரைவு ரெயில் செப்டம்பர் 25ஆம் தேதி முதல் பேராவூரணி, அதிராம்பட்டினத்தில் நின்று செல்ல ரெயில்வே வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.
கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி முதல் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு விரைவு ரெயில் ( வண்டி எண் . 06035/ 06036) வாரம் ஒரு முறை எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு பட்டுக்கோட்டை வழியாக வேளாங்கண்ணி வரை சென்று மீண்டும் எர்ணாகுளத்துக்கு வந்தடைகிறது.
இந்த ரெயிலை வாரம் இரு முறை நிரந்தர ரெயிலாக ( 16361/ 16362) இயக்க சில நாட்களுக்கு முன்பு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து இந்த ரெயில் பேராவூரணி, அதிராம்பட்டினம் ரெயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரி க்கைகள் விடுக்கப்பட்டன.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ரயில்வே வாரியம் செப்டம்பர் 25ஆம் தேதி முதல் வாரம் இருமுறை நிரந்தர ரயிலாக இயக்கப்படும் போது பேராவூரணி, அதிராம்பட்டினம் ரெயில் நிலையங்களில் நின்று செல்வதற்கான அனுமதி வழங்கியது.
இதனால் ரெயில்வே வாரியத்திற்கு பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.