உள்ளூர் செய்திகள்

யானைகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு சிற்பங்கள் மூலம் விளக்கப்பட்ட காட்சி.

நெல்லையப்பர் கோவிலில் மாணவ-மாணவிகளுக்கு யானை குறித்து சிற்பங்கள் மூலம் விளக்கம்

Published On 2022-08-12 09:24 GMT   |   Update On 2022-08-12 09:25 GMT
  • பெரும் பாதிப்புகளை சந்தித்து வரும் ஆசிய மற்றும் ஆப்ரிக்க யானைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 12-ந் தேதியை உலகை யானைகள் தினமாக உலக நாடுகள் கடைப்பிடித்து வருகிறது.
  • நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு யானைகள் குறித்த வரலாற்று கதைகளை கேட்டறிந்து குறிப்பு எடுத்துக் கொண்டனர்.

நெல்லை:

பெரும் பாதிப்புகளை சந்தித்து வரும் ஆசிய மற்றும் ஆப்ரிக்க யானைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 12-ந் தேதியை உலகை யானைகள் தினமாக உலக நாடுகள் கடைப்பிடித்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான யானைகள் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் நெல்லை மாவட்ட நிர்வாகம், அரசு அருங்காட்சியகம் மற்றும் அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வள பாதுகாப்பு மையம் இணைந்து நெல்லை நெல்லையப்பர் கோவிலில் அமைந்துள்ள யானை சிற்பங்கள் சொல்லும் கதைகள் என்ற தலைப்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு யானைகள் குறித்த வரலாற்று கதைகளை கேட்டறிந்து குறிப்பு எடுத்துக் கொண்டனர்.

மேலும் வரலாற்றில் யானைகள் மூலம் செய்யப்பட்ட நிகழ்வுகள் மற்றும் யானைகளின் தன்மைகள் குறித்து தஞ்சையில் இருந்து வந்த தென்னன் என்பவர் விளக்கமளித்தார்.

இதனைத் தொடர்ந்து சிற்பங்களில் உள்ள யானைகள் படங்களை வரைவது தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டது. தொடர்ந்து நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதியை மாணவ- மாணவிகள் கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News