உள்ளூர் செய்திகள்

பாளையில் உள்ள மையத்தில் நடைபெற்ற தேர்வை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் ஆய்வு செய்த காட்சி.

காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு- நெல்லையில் 170 பேர் தேர்வுக்கு வரவில்லை

Published On 2023-08-27 14:44 IST   |   Update On 2023-08-27 14:44:00 IST
  • நெல்லை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு 6,909 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
  • 5 வருடங்கள் நிறைவு பெற்ற போலீஸ்காரர்களுக்கு சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நடைபெற்றது.

நெல்லை:

தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு 6,909 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வில் ஆண்கள் 4,312 பேரும், பெண்கள் 1,304 பேரும் என மொத்தம் 5,616 பேர் தேர்வு எழுதினர்.

தேர்வுக்கு விண்ணப் பித்ததில் 1,293 பேர் தேர்வு எழுத வரவில்லை. இன்று காவல்துறையில் முதல் நிலை மற்றும் மற்றும் இரண்டாம் நிலை காவலர்களாக பணிபுரிந்து 5 வருடங்கள் நிறைவு பெற்ற போலீஸ்காரர்களுக்கு சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நடைபெற்றது.

எஸ்.பி. ஆய்வு

நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வுக்கு 725 பேர் விண்ணப்பித்தனர். ஆனால் இந்த தேர்வினை எழுதுவதற்கு 170 பேர் வரவில்லை. தேர்வு பாளையில் உள்ள ஜான்ஸ் கல்லூரி மையத்தில் இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேரில் ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News