அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுப்பினர் படிவத்தை வழங்கியபோது எடுத்தபடம்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் இல்லந்தோறும் தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்
- ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட பகுதியில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
- நிகழ்ச்சியை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட பகுதியில் இல்லந்தோறும் தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கரி செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார், ரூபன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அனஸ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் தூத்துக்குடி கிழக்கு ஸ்டாலின், தூத்துக்குடி மத்திய சண்முக நாராயணன், கருங்குளம் கிழக்கு கொம்பையா, கருங்குளம் தெற்கு இசக்கிபாண்டியன் திருவைகுண்டம் மத்திய ராமமூர்த்தி திருவைகுண்டம் மேற்கு லெட்சுமணன் சாத்தான் குளம் மத்திய காலேப் ஆபிரகாம் அன்னை இந்திரா நகர் பகுதி அலெக்ஸ் ஸ்பிக் நகர் பகுதி தங்கராஜ் ஏரல் முகம்மது ஃப்கவி சாயர்புரம் சத்தியவிஜய் மற்றும் ஒன்றிய, பகுதி,நகர, பேரூர் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மற்றும் கிளைகழக இளைஞரணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்கள்.