உள்ளூர் செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை

Published On 2022-10-22 15:16 IST   |   Update On 2022-10-22 15:16:00 IST
  • ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
  • சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் 2 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி அந்தியூர், அம்மாபேட்டை, கொடுமுடி, மொடக்குறிச்சி பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.

இதேபோல் குண்டேரிபள்ளம், வரட்டுபள்ளம், பெரும்பள்ளம் போன்ற அனைத்து பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள், ஏரி, குளங்கள், நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக இங்கு 56 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இதேப்போல் கவுந்தப்பாடி, கொடிவேரி, குண்டேரிபள்ளம், வரட்டுபள்ளம், மொடக்குறிச்சி, சென்னிமலை, நம்பியூர், பவானி, பவானிசாகர், தாளவாடி ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

சத்தியமங்கலம்-56, கவுந்தப்பாடி-40, அம்மா பேட்டை-40, கொடிவேரி-37, குண்டேரிபள்ளம்-29, நம்பியூர்-25, வரட்டுபள்ளம்-16, தாளவாடி-14, பவானி-12.80, மொடக்குறிச்சி-12.40, பவானிசாகர்-12, சென்னிமலை-2.

Tags:    

Similar News