உள்ளூர் செய்திகள்

அரசு துணை சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

Published On 2022-09-17 10:06 GMT   |   Update On 2022-09-17 10:06 GMT
  • கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்த பெற்றோர் தனது 3 வயது குழந்தைக்கு வயிற்று போக்கு இருந்ததால் அரசு துணை சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
  • ஆனால் துணை சுகாதார நிலையத்தில் அந்த குழந்தைக்கு மருத்துவம் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

டி.என்.பாளையம்:

டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையத்தில் அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது.

இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்த பெற்றோர் தனது 3 வயது குழந்தைக்கு வயிற்று போக்கு இருந்ததால் கே.என்.பாளையம் அரசு துணை சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

ஆனால் துணை சுகாதார நிலையத்தில் அந்த குழந்தைக்கு மருத்துவம் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கே.என்.பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் துணை சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்ட த்தில் ஈடுபட முயன்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரசு மருத்துவ அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பங்களாப்புதூர் இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதோடு அரசு மருத்துவ உயரதிகாரிகளிடம் இது குறித்து தகவல் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News