உள்ளூர் செய்திகள்

டிராக்டரில் சிக்கி டிரைவர் பலி

Published On 2022-08-24 15:38 IST   |   Update On 2022-08-24 15:38:00 IST
  • டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்த டிரைவர் டிராக்டர் ரோட்டேட்டரில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
  • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பரமசிவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஈரோடு:

ஈரோடு அடுத்த ஆர்.என்.புதூர் பெருமாள்மலையை சேர்ந்தவர் பரமசிவம் (53). கடந்த சில நாட்களாக பரமசிவத்திற்கு தலை சுற்றல் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று பிற்பகலில் காஞ்சி கோவில் அடுத்த பூச்சம்பதி சாணங்காட்டில் உள்ள ஒரு தோட்டத்தில் டிராக்டரில் பரமசிவம் உழவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது பரமசிவம் திடீரென டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார். அப்போது டிராக்டர் ரோட்டேட்டரில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து காஞ்சிகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பரமசிவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News