உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2022-06-10 13:22 IST   |   Update On 2022-06-10 13:22:00 IST
  • நம்பியூர் அருகே குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இது குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நம்பியூர்:

நம்பியூர் அருகே உள்ள இருகாலூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (21). அதே பகுதியில் தனது பாட்டியின் வீட்டில் தங்கி மரம் ஏறும் கூலி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் தனது தாயார் ராசாத்தியுடன் அடிக்கடி குடிபோதையில் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று மதியம் வேலைக்கு சென்று விட்டு வந்து இரவு நீண்ட நேரமாக சாப்பிட வராததால் பாட்டி ராமாத்தாள் கார்த்திக்கை சாப்பிட கூப்பிட சென்று பார்த்த பொழுது கார்த்திக் வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்கு மாட்டி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து ராமாத்தாள் உடனடியாக அக்கம்பக்கத்தினரிடம் தகவல் சொல்லி கார்த்திகை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கார்த்திக் இறந்து விட்டதாக கூறினர்.

அதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்து கார்த்திக்கின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News