உள்ளூர் செய்திகள்

சின்ன பிடாரியூர் பிரிவு அருகே ரோட்டில் புகை மூட்டமாக காணப்படுகிறது.

ரோட்டோர குப்பையில் தீ

Published On 2023-05-30 15:40 IST   |   Update On 2023-05-30 15:40:00 IST
  • ரோட்டோரத்தில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது.
  • வாகன ஓட்டிகள் புகை மூட்டத்தால் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.

சென்னிமலை:

சென்னிமலை-பெருந்துறை ரோடு சின்ன பிடாரியூர் பிரிவு அருகே ரோட்டோரத்தில் ஏராள மான குப்பைகள் கொட்ட ப்பட்டுள்ளது. இந்த குப்பை களில் அந்த வழியாக செல்பவர்கள் சிலர் தீ வைத்து விட்டு சென்று விடுகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் மேகமூட்டம் போல் புகை மூட்டம் ஏற்பட்டு சென்னி மலை-பெரு ந்துறை மெயின் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளா கிறார்கள்.

இரு சக்கர வாகன ஓட்டிகள் இந்த புகை மூட்டத்தால் பெரும் அவதிக்குள்ளா கிறார்கள். எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு புகை மூட்டமாக காணப்படு கிறது.

அந்த பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்கவும், தீ வைக்காமல் பார்த்து கொள்ளவும் முகாசி ப்பிடாரியூர் மற்றும் ஓட்ட ப்பாறை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News