உள்ளூர் செய்திகள்

மலைவாழ் மக்களுடன் இன்று மாலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துரையாடல்

Published On 2022-10-29 09:27 GMT   |   Update On 2022-10-29 09:27 GMT
  • அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.
  • கொங்காடை காலனி மற்றும் பழங்குடியினர் காலனிக்கு சென்று மலைவாழ் மக்களை சந்தித்து கலந்துரை யாடுகிறார்.

ஈரோடு:

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் பொதுமக்களை சந்தித்து குறைகளையும் கேட்டறிந்து வருகிறார்.

அதன்படி அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். மாலை 4 மணிக்கு அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அவருக்கு தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.அதனைத்தொடர்ந்து பர்கூர் ஊராட்சி தாமரை க்கரை வந்தடைகிறார்.

பின்னர் ஓசூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் அமைச்சர் சுப்பிரமணியன் அங்கு ஆய்வு செய்கிறார். அதைத்தொடர்ந்து கொங்காடை காலனி மற்றும் பழங்குடியினர் காலனிக்கு சென்று மலைவாழ் மக்களை சந்தித்து கலந்துரை யாடுகிறார்.

பின்னர் இன்று இரவு தாமரைக்கரை வனத்துறை பயணியர் விடுதியில் வந்து தங்குகிறார். இதைத் தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி அளவில் பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் அமைச்சர் சுப்பிரமணியன் அங்கு ஆய்வு மேற்கொள்கிறார்.

இதைத் தொடர்ந்து காலை 10 மணி அளவில் தேவர்மலை துணை சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்கிறார்.அதைத் தொடர்ந்து காலை 11:30 மணியளவில் தாமரை கரை துணை சுகாதார நிலையம் உட்பட பர்கூர் மலை கிராமத்திற்கு என்று தனியாக 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைக்கிறார்.

இதேப்போல் 102 இலவச தாய் சேய் ஊர்தி சேவை, நடமாடும் மருத்துவக் குழு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு இலவச அமரர் உறுதி சேவை மற்றும் மருத்துவ நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் மாலை 3:30 மணியளவில் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொள்கிறார். 

Tags:    

Similar News