உள்ளூர் செய்திகள்
- லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
- தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கனிராவுத்தர்குளம் பி.பெ.அக்ரஹாரம் சாலையில் அரசால் தடை செய்யப்பட்ட கேரளா மாநில லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதன்பேரில் ஈரோடு வடக்கு போலீசார் அங்கு சென்று லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டிருந்த நாமக்கல் மாவட்ம் வெப்படையை சேர்ந்த சுந்தரம் மகன் சரவணன் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.