உள்ளூர் செய்திகள்

இடி, மின்னலுடன் பலத்த மழை

Published On 2022-09-29 10:04 GMT   |   Update On 2022-09-29 10:04 GMT
  • பவானியில் மாலை ஒரு மணி நேரம் இடிடன் கூடிய கனமழை பெய்தது.
  • ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

பவானி:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக ரித்து வந்தது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இந்நிலையில் மாலை லேசான மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் மின்னலுடன் சாரல் மழை பெய்தது. இந்த திடீர் மாலையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

பவானியில் மாலை ஒரு மணி நேரம் இடிடன் கூடிய கனமழை பெய்தது. பவானி-மேட்டூர் மெயின் ரோட்டில் நகராட்சி அலுவலகம் செல்லும் எதிரே உள்ள மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் பவானி நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் மோகன் ராஜ், விஜய் ஆனந்த் மற்றும் பணியாளர்கள் உடனே சம்பவத்திற்கு வந்து மரக்கிளையை வெட்டி அப்புறப்படுத்தினர்.

இதன் பிறகு போக்குவரத்து சீரானது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக இங்கு 67 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

இதைபோல் கவுந்தப்பாடி, அம்மா பேட்டை, வரட்டுப்பள்ளம், சென்னிமலை பகுதியில் சாரல் மழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

பவானி-67, கவுந்த–ப்பாடி-18.40, அம்மா–பேட்டை-11.60, வரட்டு–பள்ளம்-7, குண்டேரி–பள்ளம்-6.20, சென்னி–மலை-3.

Tags:    

Similar News