தமிழ்நாடு செய்திகள்

பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

Published On 2026-01-26 07:49 IST   |   Update On 2026-01-26 07:49:00 IST
  • வேற்றுமையில் ஒற்றுமை என்பது நூற்றாண்டுகள் கடந்த நாட்டுணர்வுப் பண்பு.
  • இந்தியாவின் ஒவ்வொரு மொழியும், இனமும், பண்பாடும் தனித்துவமானவை.

சென்னை:

நாடு முழுவதும் 77-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

பரந்துபட்ட இந்தியா! எண்ணற்ற மொழிகள் இனங்கள், பண்பாடுகள், நம்பிக்கைகள் தழைக்கும் நாடு.

வேற்றுமையில் ஒற்றுமை என்பது நூற்றாண்டுகள் கடந்த நாட்டுணர்வுப் பண்பு.

நாம் அனைவரும் சுயமரியாதை உணர்வுடன், நம்பிக்கையுடன் சுதந்திரத்துடன் வாழும்போது ஒட்டுமொத்த இந்தியாவும் ஒருசேர உயர்கிறது.

இந்தியாவின் ஒவ்வொரு மொழியும், இனமும், பண்பாடும் தனித்துவமானவை. அவை ஒன்றை ஒன்று மதித்து வளப்படுத்துகின்றன.

நமது பலம் என்பது ஒற்றைத்தன்மை அல்ல, பன்முகத்தன்மையே. அந்த பன்முகத்தன்மை காக்கப்படுவதே இந்தியாவைக் காக்கும்.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவைப் போற்றுவோம்! பெருமிதத்துடன் என் மனமார்ந்த குடியரதின நல்வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 

Tags:    

Similar News