தமிழ்நாடு செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 15 லட்சம் பேர் விண்ணப்பம்- தேர்தல் கமிஷன்

Published On 2026-01-26 08:15 IST   |   Update On 2026-01-26 08:15:00 IST
  • படிவங்களை வாங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
  • 87 ஆயிரத்து 579 பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். அதில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டுள்ளனர். தற்போது வாக்காளராக சேர்வதற்கு வருகிற 30-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இடம் மாறி சென்ற வாக்காளர்கள், அந்த இடத்திற்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் படிவம் எண் 6-ஐ அளித்து தங்களை வாக்காளராக மீண்டும் சேர்த்துக்கொள்ள முடியும். இந்த படிவங்களை வாங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் உதவி புரிந்து வருகின்றனர். அந்த வகையில், இதுவரை 15 லட்சத்து 65 ஆயிரத்து 454 பேர் தங்களை வாக்காளராக சேர்த்துக்கொள்வதற்கு புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அதேபோன்று, 87 ஆயிரத்து 579 பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளதாகவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News