உள்ளூர் செய்திகள்

நட்டாற்றீஸ்வரர் கோவிலில் காவிரி அம்மன் திருக்கல்யாணம்

Published On 2022-11-03 14:51 IST   |   Update On 2022-11-03 14:51:00 IST
  • அகத்திய மகரிஷி லோபமித்ரா காவிரி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
  • தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கொடுமுடி:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 1-ந்தேதி குடகு மலை யில் காவிரி அம்மன் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து காவிரி ஆற்றின் அருகில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் செய்து ஐப்பசி மாதம் 30-ந் தேதிக்குள் காவிரி கடலில் கலக்கும் பூம்புகார் செல்வார்கள்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த காங்கயம் பாளையம் காவிரி ஆற்றின் நடுவில் அமைந்துள்ள நட்டாற்றீஸ்வ–ரர் கோவிலுக்கு அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தினர் வந்தனர். பின்னர் அகத்திய மகரிஷி லோபமித்ரா காவிரி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் செந்தில் குருக்கள், குகநாதன் குருக்கள் மற்றும் சிவாலய நல அறக்கட்டளை தலைவர் சந்திரசேகர் செயலாளர் காந்தி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News