உள்ளூர் செய்திகள்

ஈரோடு கிளைக்கு 500 மெட்ரிக் டன் யூரியா உரம் அனுப்பி வைப்பு

Published On 2022-12-10 15:51 IST   |   Update On 2022-12-10 15:51:00 IST
  • 1,130 மெட்ரிக் டன் யூரியா உரங்கள் ெரயில் மூலமாக ஈரோடு கொண்டு வரப்பட்டன
  • கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கிட லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன

ஈரோடு,

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் ஈரோடு கிளைக்கு 500 மெட்ரிக் டன் உரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். உர நிறுவனத்தின் மூலமாக 1,130 மெட்ரிக் டன் யூரியா உரங்கள் ெரயில் மூலமாக ஈரோடு கொண்டு வரப்பட்டன.

இதில் ஈரோடு மாவட்டத்துக்கென ஒதுக்கப்பட்ட 980 மெட்ரிக் டன் உரங்களில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் ஈரோடு கிளைக்கு 500 மெட்ரிக் டன் வழங்கப்பட்டுள்ளது.

அந்த உரங்களை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கிட லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக இந்த உரங்களை பெற்று பயனடையலாம் என ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் ஈரோடு மண்டல மேலாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News