உள்ளூர் செய்திகள்

மின்சார கட்டண உயர்வை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-24 09:54 GMT   |   Update On 2022-07-24 09:54 GMT
  • தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) ஆர்ப்பட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • இதில் முன்னாள் அமை ச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் எம்.எல்ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார்.

கோபி:

தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) ஆர்ப்பட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி ஆகியவற்றை குறைக்க கோரியும், குடும்ப தலைவிக்கான ரூ.1000, சிலிண்டர் மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, தாலிக்கு தங்கம், பெண்களுக்கு மானிய ஸ்கூட்டர் மற்றும் அரசு ஊழியருக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறு கிறது.

கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.

இதில் முன்னாள் அமை ச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் எம்.எல்ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார். இதில் பவானிசாகர் பண்ணாரி எம்.எல்.ஏ. மற்றும் புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் உள்பட கலந்து கொள்கிறார்கள்.

Tags:    

Similar News