உள்ளூர் செய்திகள்

ரூ.3 லட்சத்து 58 ஆயிரத்துக்கு தேங்காய், தேங்காய் பருப்பு ஏலம்

Published On 2022-08-25 15:20 IST   |   Update On 2022-08-25 15:20:00 IST
  • மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
  • மொத்தமாக தேங்காய், தேங்காய்பருப்பு சேர்த்து ரூ.3 லட்சத்து 58 ஆயிரத்து 56-க்கு விற்பனை நடை பெற்றது.

மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 12,042 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 1 காசுக்கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 10 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 15 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 4,722 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 325-க்கு விற்பனையானது.

இதேபோல் தேங்காய்பருப்பு 111 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 73 ரூபாய் 60 காசுக்கும், அதிகபட்ச விலையாக 76 ரூபாய் 99 காசுக்கும், சராசரி விலையாக 75 ரூபாய் 89 காசுக்கும்,

இதேபோல் 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக 40 ரூபாய் 60 காசுக்கும், அதிகபட்ச விலையாக 62 ரூபாய் 10 காசுக்கும், சராசரி விலையாக 50 ரூபாய் 10 காசுக்கு ஏலம் போனது.

மொத்தமாக 3,505 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்து 731-க்கு விற்பனை நடைபெற்றது.

மொத்தமாக தேங்காய், தேங்காய்பருப்பு சேர்த்து ரூ.3 லட்சத்து 58 ஆயிரத்து 56-க்கு விற்பனை நடை பெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags:    

Similar News