உள்ளூர் செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகைகள் திருட்டு

Published On 2023-08-22 15:05 IST   |   Update On 2023-08-22 15:05:00 IST
  • பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது.
  • போலீசார் சி.சி.டி.வி. கேமரா மூலம் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் பு ஞ்சை புளியம்பட்டி மாத ம்பாளையம் சாலை பிருந்தா வன் கார்டன் பகுதி யை சே ர்ந்தவர் ரமேஷ் (31) சமையல் தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு திரு மணமாகி மனைவியுடன் அதே பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இவர் கேட்டரிங் வேலைக்காக வெளியூர் செல்வது வழக்கம்.

இந்நிலையில் சம்பவ த்தன்று வெளியூர் சென்று விட்டு புளியம்பட்டி வந்தா ர். இதை தொடர்ந்து ரமேஷ் புளியம்பட்டியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கேட்டரிங் வேலை முடித்து விட்டு இரவு தனது வீட்டிற்கு வந்தார்.

அவர் அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே செ ன்றி பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது.

இது குறித்து அவர் போலீ சில் புகார் கொடு த்தார். அதன் பேரில் போ லீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி னர். தொடர்ந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபு ணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் பீரோ வில் 3 இடங்களில் நகைகள் மற்றும் பணம் இருந்தது. பீரோவில் ஒரு பையில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரிய வந்தது.

இதில் பீரோவில் துணிகளை எல்லாம் கலைத்து விட்டு நகைகள் வைத்திருந்த பையை மட்டும் மர்ம நபர் திருடி சென்று விட்டதாக ரமேஷ் போலீசாரிடம் தெரிவித்தார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டில் நகைகளை திருடிய வர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்க ள்.

தொடர்ந்து இன்ஸ்பெ க்டர் அன்பரசு தலை மையிலான போலீசார் அப்பகுதியில் பொருத்தப்ப ட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் ஆய்வு மேற்கொண்டு விசா ரணை நடத்தி வருகின்றனர்.

பு.புளியம்பட்டி பகுதியில் இது போன்ற திருட்டு சம்பவம் தொடர்ந்து நடந்து வருவதாக பொது மக்கள் புகார் கூறினர். இதனால் மக்களிடம் பெரும் அச்சம் ஏற்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News