உள்ளூர் செய்திகள்

குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை

Published On 2023-09-08 10:42 GMT   |   Update On 2023-09-08 10:42 GMT
  • குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர்களை பணிக்கு அமர்த்துவது குற்றமாகும்.
  • அவ்வாறு பணிக்கு ஈடுபடுத்துவது கண்டறியப்பட்டால் அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும்.

ஈரோடு:

குழந்தை தொழிலாளர் மற்றும் வளர் இளம் பருவத் தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்களில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணிய மர்த்தப்பட்டுள்ளனாரா? என்பது குறித்து மாவட்ட தடுப்பு படையினர் மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்துடன் இணைந்து மொத்தம் 175 நிறுவன ங்களில் கூட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதேப்போல் கொத்தடிமை தொழிலாளர் ஒழித்தல் சட்டத்தின் கீழ் கால்நடை மேய்க்கும் பணிகளில் கொத்த டிமைகள் உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் யாரும் கண்டறியப் படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் திருஞான சம்பந்தம் கூறியதாவது:

14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 16 முதல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினர்களை பணிக்கு அமர்த்துவது குற்றமாகும்.

அவ்வாறு பணிக்கு ஈடுபடுத்துவது கண்டறியப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப் பட்டு சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் மீது ரூ.20 ஆயிதம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்ட னையாக விதிக்கப்படும்.

மேலும் குழந்தை தொழிலாளர் பணிபுரிவது கண்டறிந்தால் பொதுமக்கள் 1098 மற்றும் 155214 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News