உள்ளூர் செய்திகள்

ஏக்கல்நத்தம் வனப்பகுதியில் மின்சாரத்துறை, வனத்துறை ஊழியர்கள் ஆய்வு

Published On 2023-04-06 15:22 IST   |   Update On 2023-04-06 15:22:00 IST
  • வனத்துறை வனவர் சம்பத்குமார், வன காப்பாளர் செந்தில் ஆகியோர் கூட்டு களஆய்வு மேற்கொண்டனர்.
  • விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மின்வேலிகள் அமைப்பது சட்டப்படி குற்றமாகும்.

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் மின்சாரம் தாக்கி உயிழப்பதை தடுக்கும் வகையில், தாழ்வான நிலையில் மின்கம்பிகள் செல்வதை உயர்த்தியும், பழுதான மின்கம்பங்களை மாற்றியும் அமைக்க மின்சாரத்துறையினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி அடுத்த ஏக்கல்நத்தம் மலை கிராமத்தில் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி, கிருஷ்ணகிரி கோட்ட செயற்பொறியாளர் பவுன்ராஜ், கிருஷ்ணகிரி நகர் உதவி செயற்பொறியாளர் கந்தசாமி, மேகலசின்னம்பள்ளி உதவி பொறியாளர் லட்சுமணன், வனத்துறை வனவர் சம்பத்குமார், வன காப்பாளர் செந்தில் ஆகியோர் கூட்டு களஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து மின்சார வாரியத்துறை அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள் கூறுகையில், மின்விபத்துகளில் இருந்து விலங்குகளை பாதுகாக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைந்து முடிக்கப்படும். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மின்வேலிகள் அமைப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே, மின்வேலி அமைப்பதை தவிர்த்து, மின்வேலியினால் மனித மற்றும் வன விலங்குகள் உயிரிழப்பதை தவிர்க்க உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

Tags:    

Similar News