உள்ளூர் செய்திகள்

தொழிலாளர் பிரதிநிதிகளுக்கான தேர்தல்

Published On 2023-10-25 13:52 IST   |   Update On 2023-10-25 13:52:00 IST
  • வெற்றி பெற்றவர்கள் தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீதிடம் வாழ்த்து
  • தொழிலாளர் பிரதிநிதிகள், வார்டு செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

வால்பாறை,

வால்பாறை ஏ.டி.பி. தொழிற்சங்கம் சார்பில் முடீஸ் எஸ்டேட் நிர்வாகத்துக்குட்பட்ட முத்துமுடி எஸ்டேட் பகுதியில் தொழிலாளர் பிரதிநிதிகளுக்கான தேர்தல் நடந்தது.

இதில் ஏ.டி.பி.தொழிற்சங்கம் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட 9 பேரில் 7 தொழிலாளர்கள் வெற்றி பெற்று தொழிலாளர் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அவர்களுக்கு தொழிற்சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது வாழ்த்து கூறினார்.

அவரிடம் வெற்றி பெற்றவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். வருங்காலங்களில் நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைக்களை தொழிற்சங்கம் மூலம் தீர்வு காண வேண்டும்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியின் தொண்டர்களை ஒருங்கிணைத்து கட்சி பணியை இப்போதே தொடங்க வேண்டும் என வால்பாறை அமீது கேட்டுக்கொண்டார்.

இதில் மாவட்ட பாசறை இணைச்செயலாளர் சலாவூதின் அமீது மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளின் தொழிலாளர் பிரதிநிதிகள், தொழிலாளர்கள், வார்டு செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News