உள்ளூர் செய்திகள்
- அந்த வழியாக வந்த லாரியின் பின்னால் மொபட்டை சீனப்பா ஓட்டி சென்றார்.
- திடீரென்று ஒரு வளை–வில் திரும்பும் போது லாரியின் பின்னால், மொபட் மோதி விபத்துக்கு உள்ளானது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் அருகே வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சீனப்பா (வயது70).
தொழிலாளியான இவர் நேற்று தனது மொபட்டில் ஓசூர்-பாகலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரியின் பின்னால் மொபட்டை சீனப்பா ஓட்டி சென்றார்.
திடீரென்று ஒரு வளைவில் திரும்பும் போது லாரியின் பின்னால், மொபட் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் படுகாயமடைந்த சீனப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.