உள்ளூர் செய்திகள்
சாலையை கடக்க முயன்ற போது பைக் மோதி முதியவர் பலி
- பைக் எதிர்பாராதவிதமாக எல்லப்பன் மீது மோதியது.
- ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி, மாவட்டம் மத்தூர் அடுத்த அத்திக்கானூர், பகுதியைச் சேர்ந்தவர் எல்லப்பன். இவர் நேற்று வீட்டின் அருகே உள்ள சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த பைக் எதிர்பாராதவிதமாக எல்லப்பன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.