உள்ளூர் செய்திகள்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி
- முதியவர் ஒருவர் நேற்றிரவு சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்று ஒரு வாகனம், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
- இதில் படுகாயம் அடைந்த அந்த முதியவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் - சேலம் ரோட்டில் சண்முகா ஓட்டல் அருகில் முதியவர் ஒருவர் நேற்றிரவு சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்று ஒரு வாகனம், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அந்த முதியவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த நாமக்கல் நகர போலீசார், அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் இறந்த அந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.