உள்ளூர் செய்திகள்

வடகிழக்கு பருவமழை எதிரொலி; நெல்லை டவுன் பகுதியில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு- முகாம் நடத்த கோரிக்கை

Published On 2022-11-15 09:29 GMT   |   Update On 2022-11-15 09:29 GMT
  • காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள் அரசு மருத்துவ மனை மட்டுமின்றி பல்வேறு தனியார் மருத்துவமனை களிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
  • பரிசோதனையில் பெரும்பாலானோருக்கு டைபாய்டு அறிகுறிகள் காணப்படுகிறது.

நெல்லை:

வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாநகர பகுதிகளில் மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

சிறுவர்கள் பாதிப்பு

காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள் அரசு மருத்துவ மனை மட்டுமின்றி பல்வேறு தனியார் மருத்துவமனை களிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


குறிப்பாக நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட டவுன் 24-வது வார்டு பகுதியில் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதிலும் பெரியதெரு, நடுத்தெரு, வேம்படி தெரு, மாதா பூங்கொடி தெருவை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் அதிகம் பாதிக்கபட்டுள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதாரமற்ற குடிநீர்

பரிசோதனையில் பெரும்பாலானோருக்கு டைபாய்டு அறிகுறிகள் காணப்படுகிறது.

இது தொடர்பாக அப்பகுதி யினர் கூறும்போது, மழைக்காலங்களில் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் கலங்களாகவும், சுகாதாரமற்ற முறையிலும் வருகிறது.

இதனால் காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே மாநகராட்சி கமிஷனர் உடனடியாக தலையிட்டு தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மழை காலத்தில் மாநகராட்சி சுகாதார துறையினர் மூலம் காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத் துள்ளனர்.

Tags:    

Similar News