உள்ளூர் செய்திகள்

ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் பூமி பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-06-18 14:18 IST   |   Update On 2023-06-18 14:18:00 IST
  • பூமியை பாதுகாப்பதற்கான நோக்கங்கள் குறித்த பதாகைகள் பள்ளியின் வளாகத்தில் அமைக்கப்பட்டது.
  • மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் பூமியை பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

தென்காசி:

செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் ஒவ்வொரு மாதமும் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு தலைப்பு தேர்வு செய்யப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன் பேரில் பூமியை பாதுகாத்தல் என்னும் தலைப்பு தேர்வு செய்யப்பட்டது. மாணவ-மாணவிகள் ஆசிரியர்களின் துணையோடு பூமியை பாதுகாப்பதற்கான நோக்கங்கள் மற்றும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் பதாகைகளை பள்ளியின் வளாகத்தில் அமைத்தனர். மேலும் அறிவியல் ஆசிரியைகள் ராஜேஸ்வரி, அபிஷா மற்றும் ரெக்ஸி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பூமியை பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

முடிவில் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரிய,ஆசிரியர்கள் அனைவரும் பூமியை பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர். விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் முன்னிலை வகித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் அருள் வர்ஷலா செய்திருந்தார்.

Tags:    

Similar News