உள்ளூர் செய்திகள்

ஊதியம் வழங்காததால் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

Published On 2022-08-18 15:38 IST   |   Update On 2022-08-18 15:38:00 IST
  • 18 நாட்கள் ஆகியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.
  • ஊதியத்தை குறித்த காலத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.

கோவை, ஆக

கோவை மாநகரட்சி மத்திய மண்டலம் 25,81, மற்றும் வடக்கு மண்டலம் 3-வது வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்கு மாதந்தோறும் முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை என்று நீண்ட காலமாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.இந்தநிலையில் இந்த மாதம் தொடங்கி 18 நாட்கள் ஆகியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் இன்று பணிக்குச் செல்லாமல் அந்தந்த மண்டல அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது,

ஒவ்வொரு மாதமும் எங்களுக்கான ஊதியம் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. இதனால் பணத் தேவை அதிகரித்து சிரமம் அடைகிறோம். எங்களுக்கு முறையான ஊதியத்தை குறித்த காலத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News