உள்ளூர் செய்திகள்

தொடர் மழை எதிரொலி- தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு:வேப்பமரம் வேரோடு சாய்ந்தது

Published On 2023-11-04 08:55 GMT   |   Update On 2023-11-04 08:55 GMT
  • கனமழை காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
  • பொதுமக்கள் ஆற்றில் குளிப்பது, வேடிக்கை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.

இதன் காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மாவட் டத்தின் பல்வேறு பகுதி களில் பெய்த கனமழை யின் காரணமாக காட்டாற்று வெள்ளம் மற்றும் சிறிய சிறிய ஓடைகள், கால்வாய்க ளில் நீர்வரத்து அதிகரித்து அந்த நீர் அனைத்தும் தாமிரபரணி ஆற்றில் சேர்கிறது.

இதன் காரணமாக வழக்கத்தை விட கூடுதலாக ஆற்றில் நீர் சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதையும், வேடிக்கை பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் செய்திருந்தார்.

இந்த நிலையில் மாவட் டத்தில் பெய்த கனமழையின் தாக்கத்தால் நெல்லை தச்சநல்லூர் மேலகரை பகுதியில் உள்ள பழமை யான வேப்பமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.

இதன் காரணமாக அப்பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சாலையில் விழுந்த மரத்தை அப்புறப் படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News