உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

போடியில் போதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

Published On 2022-08-07 06:47 GMT   |   Update On 2022-08-07 06:47 GMT
  • போடியில் போலீசார் சார்பாக போதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
  • போதை மாற்றும் பாதை என்ற தலைப்பில் குறும்படம் திரையிடப்பட்டது.

மேலசொக்கநாதபுரம்:

போடியில் போலீசார் சார்பாக போதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக போடி அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரி ரவீந்திரநாத் மற்றும் தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சமூக ஆர்வலர் வனராஜ் மற்றும் பெரியார் சேவை மையத்தின் செயலாளர் சுருளிராஜன் ஆகியோர்கள் கலந்து கொண்டு போதையின் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் சுமார் 600-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். இந்த சிறப்பு போதை விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில் போதை மாற்றும் பாதை என்ற தலைப்பில் குறும்படம் திரையிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சிவகுமார் மற்றும் துணை முதல்வர் பாலமுருகன், போடி இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

Tags:    

Similar News