மரக்காணம் அருகே டிரைவர் மீது தாக்குதல்
- கடந்த 2 நாட்களுக்கு முன் பிரபு மற்றும் அவரது நண்பர்கள் ஆத்தி குப்பம் பகுதியில் உள்ள களத்து மேட்டில் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்துள்ளனர்
- பிரபுவின் தாய் மகேஸ்வரி மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
விழுப்புரம்:
மரக்காணம் அருகே அனுமந்தை கிராமம் வடக்கு தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் பிரபு ( வயது 29) இவர் டிரைவராக வேலை செய்துவந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் பிரபு மற்றும் அவரது நண்பர்கள் ஆத்தி குப்பம் பகுதியில் உள்ள களத்து மேட்டில் நின்று கொண்டு பேசிக்கொண்டி ருந்துள்ளனர் .அப்போது அந்த இடத்திற்கு ஆத்திகுப்பம் கிராமத்தை சேர்ந்த பாவாடை மகன் பாரதி (வயது 27 )வந்துள்ளார் .பாரதி, பிரபுவை பார்த்து இங்கு ஏன் வந்தாய் என கேட்டுள்ளார் .
இதன் காரணமாக இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாரதி அருகில் கிடந்ததடியை எடுத்து பிரபுவின் தலையில் தாக்கியுள்ளார். இதில் பிரபுவுக்கு படுகாயம் ஏற்பட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இசசம்பவம் குறித்து பிரபுவின் தாய் மகேஸ்வரி மரக்காணம்போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் மீது மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபுவை தாக்கிய பாரதியை தேடி வருகின்றனர்.