தே.மு.தி.க. மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்தபடம்.
நெல்லை வண்ணார்பேட்டையில் தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மகளிர் அனைவருக்கும் ரூ.1000 உதவித்தொகை வழங்க வேண்டும், என்.எல்.சி. நிர்வாகத்தின் சார்பில் நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
நெல்லை:
தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க பிரேமலதா ஆலோசனைப்படி நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மகளிர் அனைவருக்கும் ரூ.1000 உதவித்தொகை வழங்க வேண்டும், என்.எல்.சி. நிர்வாகத்தின் சார்பில் நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும், கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நீர் ஆதாரத்தை உடனடியாக திறந்து விட வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாணவரணி துணை செயலாளர் சண்முகசுந்தரம், புறநகர் மாவட்ட செயலாளர் விஜி வேலாயுதம், மாநகர் மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த மணி, மாவட்ட பொருளாளர் மாடசாமி துணைச் செயலாளர்கள் சின்னத்துரை, பழனி குமார், செல்வகுமார், வனிதா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கலைவாணன், பாலகிருஷ்ணன், தச்சைப்பகுதி செயலாளர் ராஜ், பாளைப்பகுதி செயலாளர் ஆரோக்கிய அந்தோணி, மேலப்பாளையம் பகுதி செயலாளர் குதுப்புதீன், நெல்லை பகுதி செயலாளர் மணிகண்டன், மானூர் தெற்கு ஒன்றியம் வேல் பாண்டி, மானூர் வடக்கு ஒன்றியம் சின்னத்தம்பி, நாரணமாள்புரம் பேரூர் செயலாளர் சின்ன பாண்டி, சங்கர் நகர் பேரூர் செயலாளர் அரியநாயகம் உட்பட நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.