உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.

கல்யாணகிரியில் விவசாயிகள், அதிகாரிகள் கலந்துரையாடல் கூட்டம்

Published On 2022-08-06 09:28 GMT   |   Update On 2022-08-06 09:28 GMT
  • தமிழக அரசு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 2022-23-ம் ஆண்டு, 11 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
  • முடிவில் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் சங்கர் நன்றி கூறினார்.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் பெத்தநாய்க்கன்பாளையம் வட்டாரத்தில், தமிழக அரசு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 2022-23-ம் ஆண்டு, 11 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்டுள்ள கல்யாணகிரி ஊராட்சியில், தரிசு நில விவசாயிகள் தொகுப்புக் குழு அமைப்பு மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் படையாச்சியூர் பி.டி.அழகரசன் தலைமை வகித்தார். வேளாண்மை உதவி அலுவலர் செல்லமுத்து வரவேற்றார். வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கோதைநாயகி, வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் தாமரைச்செல்வன், தோட்டக்கலை அலுவலர் ஜான்சி, உதவி அலுவலர் மதியழகன், வேளாண் வணிக உதவி அலுவலர் சங்கர், கால்நடை மருத்துவர்கள் குமார், விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர், இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.கூட்டத்தில், தரிசு நில தொகுப்பு விவசாயிகளை ஒருங்கிணைந்து, செந்தாமரை, ரோஜா, மல்லிகை, முல்லை ஆகிய 4 குழுக்கள் அமைக்கப்பட்டது. இதில் கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ், ஊராட்சி செயலர் முருகன் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் சங்கர் நன்றி கூறினார். 

Tags:    

Similar News