உள்ளூர் செய்திகள்

மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சையில் மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்

Published On 2023-09-21 10:22 GMT   |   Update On 2023-09-21 10:22 GMT
  • விருப்ப மாறுதல் வழங்க வேண்டும்.
  • ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை ரத்து செய்ய வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யூ) சார்பில் முழுநேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இதற்கு மண்டல செயலாளர் ராஜராமன் தலைமை தாங்கினார்.

தர்ணா போராட்டத்தை கவுரவ தலைவர் கோவிந்தராஜூ தொடங்கி வைத்தார்.

இந்த போராட்டத்தில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை ரத்து செய்ய வேண்டும்.

ஈ டெண்டர் முறையில் அவுட்சோர்சிங் விடுவதை ரத்து செய்ய வேண்டும். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.

கேங்மேன் ஊழியர்களுக்கான சலுகைகள், விருப்ப மாறுதல் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர், பகுதி நேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.

சி.ஐ.டி.யூ மாநில செயலாளர் ஜெயபால், மாவட்ட தலைவர் கண்ணன், ஒய்வு பெற்றோர் நல அமைப்பு முனியாண்டி, பொறியாளர் மஞ்சுளா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் செயலாளர்கள் காணிக்கைராஜ் (தஞ்சை), கலைசெல்வன் (நாகை), ராஜேந்திரன் (திருவாரூர்), தலைவர்கள் அதிதூதமைக்கேல்ராஜ் (தஞ்சை), வெற்றிவேல் (நாகை), சகாயராஜ் (திருவாரூர்), பொருளாளர்கள் சங்கர், கண்ணன்,முகேஷ், மின்வாரிய விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News