உள்ளூர் செய்திகள்
நாங்குநேரியில் போலீசாருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது
- நாங்குநேரி-களக்காடு சாலையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- இருவரும் போலீசாரை பார்த்து அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்தனர்.
களக்காடு:
நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் நேற்று நாங்குநேரி-களக்காடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தினர்.
இதனை தொடர்ந்து இருவரும் போலீசாரை பார்த்து அரிவாளை காட்டி, மோட்டார் சைக்கிளை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். விசாரணையில் அவர்கள் நெல்லை டவுன் கரிக்கா தோப்ப்பு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் (43), பாட்டாபத்து, தேவிபுரத்தை சேர்ந்த மணிமுருகன் (43) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.