உள்ளூர் செய்திகள்
திருநடன திருவிழா நடந்தது.
செல்வமகா காளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா
- முக்கிய வீதிகளின் வழியாக செல்வமகா காளியம்மன் அழைத்து வரப்பட்டது.
- கிராமமக்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்து மாவிளக்கு இட்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
பாபநாசம்:
பாபநாசம் கஞ்சிமேடு செல்வமகா காளியம்மன் கோவில் காளி திருநடன திருவிழா நடைபெற்றது. காலையில் செல்வமகா காளியம்மன் படுகளம் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் முக்கிய வீதிகளின் வழியாக செல்வமகா காளியம்மன் அழைத்து வரப்பட்டது.
கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்து மாவிளக்கு இட்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள்கலந்து கொண்டு வழிபட்டனர்.