பொம்மிடி புனித அந்தோணியார் ஆலய வளாகத்தில்,கருப்பு கொடி ஏந்தி ஆயர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
பொம்மிடியில் தலித் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்
- தருமபுரி மறை மாவட்ட தலித் கிறிஸ்தவர்கள் சார்பில் பொம்மிடியில் உள்ள புனித அந்தோணி யார் ஆலய வளாகத்தில் அறப் போராட்டம் நடைபெற்றது.
- தருமபுரி, கிருஷ்ணகிரி, தேன்கனி க்கோட்டை என பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற் பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
பாப்பிரெட்டிபட்டி,
நீதியரசர் மிஸ்ரா கமிசன் பரிந்துரை செய்த தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துறையை ஏற்று தலித் கிறிஸ்தவர்கள் நாடு முழுவதும் அகஸ்டு 10-ம் தேதியை கருப்பு தினமாக கடைபிடித்து வரு கின்றனர்.
இதனையடுத்து தருமபுரி மறை மாவட்ட தலித் கிறிஸ்தவர்கள் சார்பில் பொம்மிடியில் உள்ள புனித அந்தோணி யார் ஆலய வளாகத்தில் அறப் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் ஃபயர் தலைமை தாங்கினார்,
தமிழக ஆயர் பேரவை யின் எஸ்சி. எஸ்டி பணிக்குழு மாநில பொரு ளாளர் எம்.எப்.ரமேஷ் வரவேற்புரை ஆற்றினார்.
இதில் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் , மற்றும் பொம்மிடி, பி.பள்ளி ப்பட்டி, தென்கரை க்கோட்டை , அரூர், பாப்பி ரெட்டிப்பட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி, தேன்கனி க்கோட்டை என பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற் பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்
இறுதியாக தருமபுரி மறை மாவட்ட எஸ்சி.எஸ்டி பணிக்குழு செயலாளர் பாதர் மோசஸ் நன்றியுரை ஆற்றினார்.