உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா பேசினார்.

தஞ்சையில், குற்ற தடுப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்

Published On 2023-07-17 09:37 GMT   |   Update On 2023-07-17 09:37 GMT
  • சந்தேகப்படும்படி நபர்களை பார்த்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு செல்லும்போது காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் கள்ளபெரம்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ரெட்டிபாளையம் ரோட்டில் உள்ள மண்டபத்தில் குற்ற தடுப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா தலைமையில் நடைபெற்றது.

இதில் கள்ளபெரம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய், வல்லம் உட்கோட்டம் தனிப்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேதிதாசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு அறிவுரைகளை துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா வழங்கினார். தொடர்ந்து அவர் பேசும்போது :-

வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு செல்லும்போது காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். கேட்டின் பூட்டை வெளியில் இருந்து திறக்க முடியாதபடி அமைக்க வேண்டும்.

கதவில் வெளியில் இருப்பவர்களை பார்க்கும் லென்ஸ் பொருத்தலாம். பாதுகாப்பிற்காக இரவு காவலர்களை நியமிக்கலாம்.

நகைகளை வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்க வேண்டும். சந்தேகப்படும் படி நபர்களை பார்த்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சி.சி.டி.வி. கேமரா பொருத்தலாம்.

கவனத்தை திசை திருப்பி வழிப்பறி, கொள்ளைகள் போன்றவற்றை தவிர்க்க கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றார்.

Tags:    

Similar News