உள்ளூர் செய்திகள்
தளி அரசு கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு
- 3ம் கட்ட கலந்தாய்வு 19-ம்தேதி முதல் நடைபெறும்.
- கல்லூரிக்கு நேரடியாக வந்து விண்ணப்பம் பெற்று, கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், மூன்றாம் கட்ட கலந்தாய்வு 19ம்தேதி முதல் நடைபெறும். இதுகுறித்து தளி அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மாறன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2023-2024ம் கல்வியாண்டிற்கான மூன்றாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வருகிற 19-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. இணையதளத்தில் பதிவு செய்யாத மாணவர்கள், கல்லூரிக்கு நேரடியாக வந்து சேர்க்கைக்கான விண்ணப்பம் பெற்று, கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.