கோவையில் கேபிள் டி.வி ஊழியரிடம் பணம் பறித்த மாநகராட்சி ஊழியர் கைது
- மதன்குமார் மீது ஏற்கனவே போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன
- டீக்கடையில் இருந்த ரூ.48,567 பணத்துடன் மாயமான திரிபுரா வாலிபர்
கோவை,
கோவை ரெட்பீல்டு ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). கேபிள் டி.வி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் செந்தில்குமார் நேற்று கெம்பட்டி காலனி ரோட்டில் உள்ள பேக்கரி யில் டீ குடித்து கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் சட்டைப்பையில் இருந்து ரூ.700 பறித்து தப்பி செல்ல முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் கூச்சல் போடவே, அக்கம்ப க்கத்தினர் திரண்டு வந்து அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து கடைவீதி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் செந்தில்குமாரிடம் பணம் பறித்தது உக்கடம், சிஎம்சி காலனியை சேர்ந்த மதன்குமார்(34) என்பது தெரியவந்தது. இவர் தற்போது மாநகராட்சி தூய்மை பணியாளராக உள்ளார். மதன்குமார் மீது ஏற்கனவே கோவை மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை கடைவீதி போலீசார் கைது செய்து கோர்ட் டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை மேட்டுப்பாளையம் தனியார் மருத்துவமனையில் அமர்நாத் (39) என்பவர் காபி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் திரிபுரா மாநிலம், அகர்தலாவை சேர்ந்த பிரிதம்தேய் (27) என்பவர் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அமர்நாத் சம்பவத்தன்று கல்லாவில் ரூ. 48,567 பணம் வைத்து விட்டு வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது பிரிதம்தேய்யை காணவி ல்லை. கல்லாவில் இருந்த ரூ. 48,567 ரொக்க பணமும் மாயமாகி இருந்தது.
அமர்நாத் கடையில் இல்லாத நேரத்தை பயன்ப டுத்தி அந்த வாலிபர் கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அமர்நாத் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்துடன் தப்பி ஓடிய பிரிதம் தேய் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பிரேம் என்பவரையும் தேடி வருகின்றனர்.