ஈரோட்டில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
- ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள ஜவான் பவன் முன்பு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சூரம்பட்டி:
ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள ஜவான் பவன் முன்பு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் சரவணன், மக்கள்ராஜன், திருச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா, இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் செந்தூர் ராஜகோபால், மண்டல தலைவர்கள் ஜாபர் சாதிக், விஜயபாஸ்கர், மாவட்ட முன்னாள் தலைவர் ஈ.ஆர். ராஜேந்திரன், முத்துகுமார், உதயகுமார், செந்தில்ராஜா, முன்னாள் நகர தலைவர் குப்பண்ணா சந்துரு, ஈரோடு பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் விஜய் கண்ணா, விவசாய அணி மாவட்ட தலைவர் பெரியசாமி, வக்கீல் அணி ராஜேந்திரன், மகளிர் அணி புவனேஷ்வரி, முகமது அர்சத், பாட்சா உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.