உள்ளூர் செய்திகள்

மூலைக்கரைப்பட்டியில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-28 09:10 GMT   |   Update On 2022-06-28 09:10 GMT
  • ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
  • சிந்தாமணி பஞ்சாயத்து கீழ சிந்தாமணியில் இளைஞர்களுக்கு கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்டெம்பு போன்ற உபகரணங்களை வழங்கினார்.

நெல்லை:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நேற்று காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.

இதன் ஒருபகுதியாகவும், நெல்லை சந்திப்பு பழைய பஸ்நிலையத்தை ஸ்மாட்சிட்டி திட்டத்தின் மூலம் புதுப்பிக்கும் போது கிடைத்த ஏராளமான ஆற்று மணலை கொள்ளையடித்த மாநகராட்சி அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யவும், சி.பி.சி.ஐ.டி. விசாரணையை விரைவு படுத்தக்கோரியும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மாலை மூலைக்கரைப்பட்டி பஸ்நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் தலைமை தாங்கினார்.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாநில விவசாய பிரிவு செயலாளர் விவேக் முருகன் மற்றும் வட்டார காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உடற்பயிற்சி உபகரணங்கள்

பாளையங்கோட்டை யூனியன் சீவலப்பேரி பஞ்சா யத்து பொட்டல்நகரில் இளைஞர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் பார், சிங்கள் பார் போன்ற உபகரணங்களை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் வழங்கினார்.

மேலும் சிந்தாமணி பஞ்சாயத்து கீழ சிந்தாமணியில் இளைஞர்களுக்கு கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்டெம்பு போன்ற உபகரணங்களை வழங்கினார்.

மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் செல்லப்பாண்டி, வட்டார தலைவர்கள் சங்கரபாண்டியன், நளன், ரவீந்திரன், மாவட்ட செயலாளர் முருகேசன், நிர்வாகி சுப்பிரமணியன், பேரூராட்சி கவுன்சிலர் மரிய பில்லியன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News