உள்ளூர் செய்திகள்

கிராமசபா கூட்டத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பேசினார்.

கிராமசபா கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு

Published On 2022-10-03 10:16 GMT   |   Update On 2022-10-03 10:25 GMT
  • மாவட்ட ஊராட்சித் தலைவர் பாலசுப்ரமணியன், மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  • இதில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மூலம் கிராமங்களின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டாரத்திற்குட்பட்ட மேலத்திருப்பாலக்குடி ஊராட்சியில் காந்தியடிகளின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டார். இக்கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

மாவட்ட ஊராட்சித் தலைவர் பாலசுப்ரமணியன், மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பேசியதாவது;-

கிராம சபா கூட்டத்தில் ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு கிராம வளர்ச்சிக்கு தேவையான கருத்துக்களை வழங்கி, கோரிக்கைகளை தெரியப்படுத்திட வேண்டும். கிராம சபா கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மூலம் கிராமங்களின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.

அதனைத்தொடர்ந்து வேளாண்மைத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தார்பாய் மற்றும் இடுப்பொருட்களும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளையும் கலெக்டர் வழங்கினார்.

முன்னதாக கிராம சபா கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம், சுகாதாரம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட 24 தீர்மானங்கள் பொதுமக்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, மகளிர் திட்ட அலுவலர் ஸ்ரீலேகா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ரவீந்திரன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் பொன்னியின் செல்வன், வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஷோபா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், பக்கிரிசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News